Skip to main content

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே


தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
தேவ பிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம் - தேவ

நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்துக் கொள்வோம் பரிசுத்த ஜாதியாக - தேவ

கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும் - தேவ

இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
மகிமை மேல் மகிமை அடைந்திடுவோம் நாம்
மருரூபமாகிடுவோம் மகிமையில் சேர்ந்திடுபோம் - தேவ