தேவாதி தேவன் இயேசு அவர் நம் மத்தியில் இருக்கிறார்
அவர் நம் மத்தியில் இருக்கிறார்
அவரையே நம்பிடுவோம்
என்றென்றும் காத்திடுவார்
சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாய் இருக்கும்
இயேசுவை தேடுகின்ற எல்லோரும்
சுகித்து ஆனந்திப்பார் - தேவாதி
வஞ்சகன் சிந்திக்கும் வலைதனிலே
பொல்லாங்கன் விழுந்தழிவான்
இயேசுவை தஞ்சமாய் நம்பிடுவோர்
செழித்து நிலைத்திருப்பார் - தேவாதி
இருமனமுள்ள மனிதர்கள் தம்
வழிகளில் அழிந்திடுவார்
இயேசுவை இதய தெய்வமாக்கினோர்
மகிழ்ந்து கெம்பீரிப்பார் - தேவாதி
பொருளாசையும் தன் பரிதானமும்
தன் வீட்டை அழித்து விடும்
இயேசு மீட்ட நீதிமான்கள்
தன் வீட்டில் ஆர்ப்பரிப்பார் - தேவாதி
இனிய சொற்கள் தேன்கூடுபோல்
ஆத்ம மதுரமாகும்
இயேசுவின் நாமம் நம்புவோர்க்கென்றும்
நல்ல ஔஷதமாம் - தேவாதி