தேவ அன்பே தூய அன்பே என்னை தாங்கும் அன்பே
என்னை தாங்கும் அன்பே
எந்தன் உள்ளத்தை நெருக்கி ஏவி
அவரில் பெலப்படுத்தும்
பாவ உலகத்தில் மாளும் மாந்தரை
மீட்க ஜீவன் தந்தார்
இவரின் அன்பை எடுதுரைக்க
அவனிதனிலே கூடுமே - தேவ
மகிமை துறந்து தேவ மைந்தன்
என்னை தேடி வந்தார்
தியாக அன்பர் இயேசு ராஜன்
இவரை என்றும் போற்றுவேன் - தேவ
அன்பின் அகலம் நீளம் உயரம்
ஆழம் அறிந்திடவே
மாயலோக ஆசை வெறுத்து
அவரை என்றும் நேசிப்பேன் - தேவ
அன்னை அன்பிலும் மேலாய் என்னில்
அன்பு கூர்ந்தாரே
உள்ளம் கவர்ந்த அன்பிற்கீடாய்
என்னை தந்தேன் இயேசுவே - தேவ