Skip to main content

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே துதிகள் நடுவே கர்த்தர் தங்க


தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

எழும்பு சீயோனே ஒளி வந்தேதே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரொளி வீசிடுதே - தேவ

நலமுடன் நம்மை இதுவரையும்
நிலை நிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசி வரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் - தேவ

குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிÞதுவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய்திறப்போம் - தேவ

தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் - தேவ

பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் Þதலத்தில்
என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் - தேவ