Skip to main content

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்


தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

பயத்தோடே நல் பக்கியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் - தேவ

ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே - தேவ

இராப்பகலாய் தம் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் - தேவ

உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் - தேவ

சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே - தேவ

ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம் - தேவ