Skip to main content

தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம்


தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்

கர்த்தர் நாமம் ஓங்கிப்படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்

தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம்

நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்