Skip to main content

எக்காலும் இயேசுவே! சகாயராயிரும்; அன்பான சத்தத்தால்; என் ஏக்கம் நீக்கிடும்


எக்காலும் இயேசுவே! சகாயராயிரும்;
அன்பான சத்தத்தால்; என் ஏக்கம் நீக்கிடும்
எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும்
நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே!

எப்போதும் இயேசுவே! இப்பாவியோடிரும்;
தீயோனின் சோதனை - ஓயாமல் விலக்கும் - எந்

எக்காலும் இயேசுவே! இக்கட்டு வாழ்விலும்
அன்பாகத் தங்குவீர் - என் நீச நெஞ்சிலும் - எந்

எப்போதும் இயேசுவே! இப்பேதைக் கிரங்கும்;
மெய்ஞானம் சத்தியம் - செய்நன்றி போதியும் - எந்

எக்காலும் இயேசுவே! எக்கேடும் நீக்குமேன்;
காருண்ய நாயகா! நீர் என்னை ஆளுமேன் - எந்