எனக்காய் யார் போவார்? ஶி பாடுகள் எனக்காய் யார் சகிப்பார்?
எனக்காய் யார் சகிப்பார்?
திறப்பின் வாசலில் நிற்பவன் யார்?
என்றேசு அழைக்கின்றார் உன்னை
இன்றேசு அழைக்கின்றார்
புத்தியுள்ள கன்னிகை போல்
விழித்திடு விசுவாசியே
வல்லமை நீ பெற்றிடவே
ஜெபித்திடு விசுவாசியே - என்றும்
ஜெபித்திடு விசுவாசியே - எனக்காய்
புல்லுள்ள இடங்களிலே
மேய்ச்சல் காட்டிடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றி
ஆறுதல் படுத்திடுவார் - தினம் தினம்
ஆறுதல் படுத்திடுவார் - எனக்காய்
முதியோரே வாலிபரே
கர்த்தருக்காய் புறப்படுங்கள்
வருத்தப்பட்டு சுமை சுமப்போரை
அவரண்டை சேர்த்திடுங்கள் மேய்ப்பன்
அவரண்டை சேர்த்திடுங்கள் - எனக்காய்