Skip to main content

என் இயேசுவின் சந்நிதியில் என்றும் கீதங்கள் பாடிடுவேன்


என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
என்னைக் காத்திடுமே அவர் நாமமதை
துதி கீதங்கள் பாடிடுவேன்

கண்ணீர் அவர் துடைத்திடுவார்
தம் கரங்களால் தாங்கிடுவார்
எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே - என்

பரமன் குரல் கேட்கும்போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே - என்