எங்கள் பிதாவே இயேசு இரட்சகரே
இயேசு இரட்சகரே
தூயாவியானவரே
உம்மைத் தொழுகிறோம்
சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே
சாவாமையுள்ளவர் நீர்தானே
ஆதியும் அந்தமும் நீர்தானே
ஆராதனைக்குரியவர் நீர்தானே
சர்வ வல்ல தேவன் நீர்தானே
சாரோனின் ரோஜா நீர்தானே
சேனைகளின் கர்த்தர் நீர்தானே
திரியேக தேவனும் நீர்தானே
அதிசயமானவர் நீர்தானே
ஆலோசனைக் கர்த்தர் நீர்தானே
மகிமையின் ராஜா நீர்தானே
மாறாத நேசர் நீர்தானே