Skip to main content

என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு


என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு

நான் எந்த நிலைமையில் இருந்தாலும்
நான் மனரம்மியமாய் இருக்கின்றேன்
பட்டினியாய் இருந்தாலும் பரிபூரண மடைந்தாலும்
தாழ்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும்
போதிக்கப்பட்டேன் - நான் - என்னை

என் தேவன் யெகோவா யீரே
என் தேவன் யாவையும் தருவாரே
தமது ஐசவரியத்தின்படியே எனது குறைவே நிறைவாக்கும்
ஏசவை விசுவாசித்தே தேவ
மகிமையைக் காண்பேன் - நான்

நான் சோம்பலின் அப்பம் புசியாமல்
நான் சோர்ந்து தரித்திரம் அடையாமல்
உற்சாகமாக உழைத்திடுவேன் உண்மை ஊழியம் செய்திடுவேன்
தேவனை அதிகாலை தோறும்
தேடிக் கண்டடைவேன் - நான்

கர்த்தருக்குக் காத்திருந்தே
நான் புதுப் பெலனை அடைந்திடுவேன்
கழுகுபோல செட்டைகளையடித்து நான் எழும்பிடுவேன்
நடந்திட்டாலும் ஓடினாலும்
சோர்ந்திடமாட்டேன் - நான் - என்னை

என் இயேசு சீக்கிரம் வருவாரே
நான் அவருக்காகவே காத்திருப்பேன்
அவனவன் கிரியைப்படியே அவர் அருளும் பிரதிபலனே
ஆண்டவர் வரும்போது தம்முடன்
கொண்டுவருவாரே - இயேசு - என்னை