Skip to main content

என் மகிழ்ச்சி இன்றும் என்றும் வேதமாகையில் நன்மையென நாடிச் செல்வேன் வேத வீதியிலே


என் மகிழ்ச்சி இன்றும் என்றும் வேதமாகையில்
நன்மையென நாடிச் செல்வேன் வேத வீதியிலே
உண்மையாகவே விரைந்து செல்வேன் - என்

ஆராய்ந்து பார்க்கச் சொன்ன ஆண்டவர் வேதம்
மிக அருமையான ஆசீர்வாதம் அளித்திடும் என்றுமே
சிறுமை நீக்கிய நித்திய ஜீவன் - என்

நேர்த்தியான இயேசு சொன்ன இன்ப மொழிகள்
கார்திடுவோர் பாக்கியர் தான்இன்றும் என்றுமே
ஆத்திரமாக காத்திடுவேனே - என்

அப்போஸ்தலர் உபதேசம் அஸ்திபாரமே,
தப்பிதமே இல்லை இயேசு கர்த்தன் வசனமே,
அப்போ அப்போ தான் மாற்றவே மாட்டேன் - என்

நல்ல அப்பன் நல்ல அம்மை நல்ல வைத்தியனை
நல்ல நண்பன் நல்ல ராஜ்யம் நல்ல ஜீவனை
சொல்லுதே வேதம் நல் இயேசு என்று தான் - என்

அன்பரின் அருமறை அளிக்கும் அனுபவம்
மண்பால் தானே மகிழ்ச்சி தரும் மகிமையின் கனி
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்லதே - என்