Skip to main content

எந்தன் வாயில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகிறார் எந்தன் உள்ளம் அன்பினால் நிறையுதே


எந்தன் வாயில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகிறார்
எந்தன் உள்ளம் அன்பினால் நிறையுதே
இன்ப இயேசுவே மேகத்தில் வருவார்
எந்தன் துன்பமெல்லாம் அன்று தீரமே
நான் புதுப்பாட்டு என்றும் பாடுவேன்
ஆனந்தம் ஆ! ஆனந்தம்
ஆத்ம நாதனோடு எந்தன் வாசம் ஆனந்தம்

இப்புவியின் இன்பம் என்க்கொன்றும் வேண்டாமே
இரட்சகனாம் இயேசுவின் சமூகம் போதுமே
தேவ மகிமையில் பறந்து நான் செல்லுவேன்
அக்ஷணத்தில் இயேசு என்னைச் சந்திப்பார்
ஆ! எந்தன் பாக்யம் யாருக்கும் வர்ணிப்பேன் - ஆ

இலக்கை நோக்கி நான் எந்தன் ஓட்டம் ஓடியே
லாபமான யாவையும் வெறுத்து தள்ளினேன்
பெற்று கொள்ளுவேன் நிச்சயம் பிரதிபலம்
ஆ! லக்ஷா லக்ஷ தூதர் முன்பாக
நான் ஜீவ கிரீடம் அன்று சூடுவேன் - ஆ

ஜீவ ஜல நதியிலே தாகம் தீர்ப்பேனே
ஜீவ விருட்சத்தின் பலன் நான் புசிப்பேனே
ஜீவ நாயகன் ஏசுவின் கூடவே
ஜீவ பரதீசில் நானும் இளைப்பாறுவேன்
நான் தூதரோடு அங்கு வாழுவேன் - ஆ

வீணை வாத்தியக்காரரை நான் காணுவேன்
விண் தூதர் சைனத்தையும் அங்கு காணுவேன்
விண்ணதிபனாம் மகிமையின் தேவனை
பொன்னின் முடியோடு அதி வேகம் காணுவேன்
நான் விண்ணிலே பாடிப் போற்றுவேன் - ஆ