Skip to main content

என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர் நீர்தான்


என் அன்பரும் நீர்தான்
என் ஆருயிர் நீர்தான்
இன்பமும் நீர்தான்
இனியவரே
அன்பரே இயேசுவே
எந்தன் ஆத்மநேசரே

உலகினிலே உம்மைப்போல
வேறொரு நேசரில்லை
உள்ளத்திலே உம்மையல்லால்
வேறொரு ஆசையில்லை

உம்மைப்போல அழகினிலே
சிறந்தவர் ஒருவரில்லை
என் நேசர் நீரல்லவோ
என் பாக்கியமே

உலகினிலே உம் அன்பை போல
உண்மை அன்பு இல்லை
உன்னதத்தில் என்னை சேர்க்க
உம் ஜீவனைத் தந்தீரே

உம்மையே நான் என்முன்னே
என்றென்றும் வைத்திடுவேன்
சுதந்திரமே என் பங்கே
அசைக்கப்படுவதில்லை நான்

இதயத்திலேயே ஓர் ஏக்கம் உண்டு
உம்மை தரிசித்திட
பொன் முகத்தை தரிசிக்கவே
என் மனம் ஏங்குதைய்யா