என்னையும் உமக்கு நான் தந்தேனே ஏசு நாதா என் கரம் பிடித்தென்றும் நடத்திடுமே
என் கரம் பிடித்தென்றும் நடத்திடுமே
அனுபல்லவி
என் சித்தம் என்னில் ஒன்றும் நிறைவேற விரும்பேனே
உம் சித்தம் போல என்னை நடத்திடு பரமேசா - என்னையும்
பாதையில் பாடுகள் பலுகியே வந்தாலும்
வாதை பிணியும் என்னை வருத்தினாலும்
வல்லமை குன்றிடாமல் வந்தென் மேல் அமர்ந்துமே
வழுவாமல் அனுதினம் நடத்திடும் பரமேசா - என்னையும்
கொந்தளிப்பால் அலைமோதிடும் படகுபோல்
எந்தன் ஜீவிய யாத்திரை கடந்தாமே
சோதனை வெள்ளம் போல புரண்டென்மேல் வந்தாலும்
சோர்ந்திடா தயையுடன் நடத்திடும் பரமேசா - என்னையும்
அக்கினி ஊடாக நடந்து நான் சென்றாலும்
அக்கினி பற்றிடாதென்றுரை செய்தீரே
தண்ணீரைக் கடந்து நான் நடந்திடும் வேளையும்
தவறாமல் துணை நின்ற நடத்திடும் பரமேசா - என்னையும்
ஏழை என் வாலிபத்தின் அதிபதி நீரல்லே
என் மணவாளனும் நீர் தானல்லோ
ஜீவனுள்ள நாளெல்லாம் நீர் போதும் இயேசுவே
ஜீவனும் போகும் வரை நடத்திடும் பரமேசா - என்னையும்
இத்தரை யாத்திரை விரைந்தோடி முடிந்தபின்
அக்கரை நாட்டினைச் சுதந்தரிப்பேன்
இயேசுவே கண்ணீர் யாவும் துடைத்தென்னைத் தேற்றுமே
என்றுமாய் ஜெயக்கீதம் பாடுவேன் பரமேசா - என்னையும்