எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே எம் பூரண சீயோனே
எம் பூரண சீயோனே
அனுபல்லவி
கன்மலையின் மேலே கழுகுபோல்
உன்னதத்தில் வாழ்வோம் - இயேசு
பக்தர்களே ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்
ஞானக் கண்மலையே கிறிஸ்தேசு எம் அரனே
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
ஏசுவின் மேல் நின்ற வீடாய் நாமிலங்கிடுவோம் - எம்
அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாட பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ! பேரின்ப ஆத்ம வாழ்வில் ஆனந்தங் கொள்வோம் - எம்
மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம் - எம்
ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
பாழுலகை வேகம் தாண்டி அக்கரை சேர்வோம் - எம்
வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வான விருந்தில் பங்கடைந்திடுவோம் - எம்