Skip to main content

என் பாவம் தீர்ந்த நாளையே அன்போடு எண்ணி ஜீவிப்பேன்


என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்
இன்பநாள் இன்பநாள்
என் பாவம் தீர்ந்து போன நாள்
பேரன்பர் என்னை இரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்பநாள் இன்பநாள்
என் பாவம் தீர்ந்து போன நாள்

இம்மானுவேல் இப்பாவியை
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
சந்தேகமே நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய்ச் சேர்த்தனர் - இன்ப நாள்

என் உள்ளமே உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழ்வாய்
ஆருயிர் தந்த நாதரை
ஓர்க்காலும் விட்டு நீங்கிடாய் - இன்ப நாள்

ஆட்கொண்ட நாதா எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னிசையாலே பாடுவேன் - இன்ப நாள்