எனது சரீரம் உமதல்லவோ எனது ஜீவனும் உமதல்லவோ
எனது ஜீவனும் உமதல்லவோ
எனதனைத்துமே உமக்கல்லவோ
உமதடிமை என்றும் நானல்லவோ
நீர் படைத்த ஜீவன் நாங்கள்
எங்கள் முழங்கால் யாவும் முடங்கும்
எங்கள் நாவு அறிக்கை செய்யும்
எங்கள் இயேசு இதய தெய்வமே
நிற்கவும் நடக்கவும் ஓடிடவும்
உதவும் உங்களின் கால்கள் அன்றோ
இவை அனைத்திலும் உத்தமமே
அந்த கால்கள் அவரடி பணிவதன்றோ - நீர் படைத்த
கெர்ச்சிக்கும் சாத்தான் நடுங்குவானே
முழங்காலில் நின்றிடும் பக்தனிடம்
உமது மகிமை வெளிப்படுமே
உம்மை அறிக்கை செய்யும் போதினிலே - நீர் படைத்த
மேகத்தில் நீர் வரும் நாளினிலே
பூமியில் சகல ஜாதிகளும்
முழங்கால் மடித்து மண்டியிட்டு - உம்மை
கர்த்தாதி கர்த்தர் என போற்றுவார் - நீர் படைத்த