Skip to main content

என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ


என் கிருபை உனக்குப் போதும்
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம் - என்

உலகத்திலே துயரம் உண்டு
திடன் கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன் - என்

எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப்படுவதில்லை - என்

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு - என்