Skip to main content

என் ஆத்துமாவே கலங்கிடாதே உன்னத தேவன் உன் அடைக்கலமே


என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே
வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும் (2)

பஞ்சம் பசியோ நிர்வாணமோ
மிஞ்சும் வறுமையோ வந்திடினும்
கொஞ்சம் அஞ்சாதே
தஞ்சம் தந்து உனைத் தாங்கிடுவார் - என்

உற்றார் உறவினர் மற்றும் பலர்
குற்றமே கூறித் திரிந்திடினும்
கொற்றவன் இயேசுன்னை
பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார் - என்

நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில்
அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும்
வஞ்சகன் எய்திடும்
நஞ்சாம் கணைகளைத் தகர்த்திடுவார் - என்

வாழ்க்கைப் படகினில் அலை மோதி
ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார்
சூழ்ந்திடும் புயல் நீக்கி
வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார் - என்

மரணமே வந்தாலும் மருளாதே
சரணடைந்தால் தைரியம் தந்திடுவார்
அரனவர் ஆபத்தில்
திரணமாய் மதிப்பாய் உன் ஜீவனையே - என்

துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய்
அன்பர் சென்ற பாதை அதுவேதான்
துன்பமே உன் பங்கு
துன்ப மூலம் தேவ ராஜ்யம் சேர்வாய் - என்