Skip to main content

என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன்


என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னை தாங்கிடுவார் - என் இன்ப

இவரே நல்ல நேசர் என்றுமே
தாங்கி என்னை நடத்துவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னை காத்திடுவார் - என் இன்ப

பார் போற்றும் இராஜன் புவியில்
நான் வென்றிட செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் - என் இன்ப