Skip to main content

எந்த நேரமும் எப்போதுமே இயேசு எனக்கு ஒத்தாசை


எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை
இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக் கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே - எந்தநேரமும்

சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே - எந்தநேரமும்

சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை
ஒரு போதும் கெட்டுப் போகாதே
தம்மைத் தேடுவோரை கர்த்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமே - எந்தநேரமும்

ஒவ்வொரு ஆண்டு முழுவதும்
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத்தத்தம் தந்து நடத்துவார் - எந்தநேரமும்

குமாரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக்கொள்வோம் - எந்தநேரமும்