Skip to main content

என் தேவனே என் அன்பனே வந்திடுவீர் வல்லமையாய்


என் தேவனே என் அன்பனே
வந்திடுவீர் வல்லமையாய்

அனுபல்லவி
ஆசீர்வாத நிறைவுடனே
அன்பே என்மேல் இறங்கிடும்

இரண்டோ மூன்றோ பேர்கள் எங்கே
உண்டோ அங்கே நானிருப்பேன்
என்றுரைத்த வாக்குப்படி
இன்று எம்மை சந்தித்திடும் - என்

கல்வாரியில் ஜீவன் தந்த
எங்கள் தேவா யேசு நாதா
எங்களுள்ளம் உந்தனன்பால்
நிறைந்தும்மைத் துதித்திட - என்

அந்தோ ஜனம் பாவங்களால்
நொந்து மனம் வாடுதையோ
இன்ப முகம் கண்டால் போதும்
இருள் நீங்கி ஒளி காண்பாய் - என்

ஆதரவாய் அன்றும் கரம்
நீட்டி சுகம் ஈந்த தேவா
ஆவலுடன் வந்தோர் பிணி
யாவும் தீரும் அருள் நாதா - என்

ஆதி அன்பால் தேவ ஜனம்
தாவி மனம் மகிழ்ந்திட
ஆவி ஆத்மா சரீரமும்
பரிசுத்தம் அடைந்திட - என்

ஆவலுடன் உம் வரவை
எதிர் நோக்கிக் காத்திருக்க
ஆவிவரம் யாவும் பெற்று
நிறைவுடன் இலங்கிட - என்