Skip to main content

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே


எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் - (2)

சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம்பாதம் வந்தேன் - எந்தன்

உம்மோடு எந்நாளும்
உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேன் - எந்தன்

நம்பிக்கை இல்லாமல்
அழிகின்ற மாந்தர்தனை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கிறேன் நாதா - எந்தன்