என் ஜீவ பயணத்திலே தேவா உம் பாதமே சரணம்
உம் பாதமே சரணம்
பூலோக மீதினில் நீரேயல்லால்
யாரும் துணையில்லையே
மண்ணுலக பாவ இன்பங்களும்
மாயமாய் மறைந்திடுமே
மாறா உம் வாக்குகள் அனைத்துமே
நான் நம்பி பின் தொடர்வேன் - என்
பலவித சோதனை கஷ்டங்களும்
பலமாய் அணுகிடினும்
கலங்கின எந்தன் இருதயத்தை
அசையாமல் காத்திடுவீர் - என்
உந்தன் திவ்விய சந்நிதியிலே
பரிபூரண சந்தோஷமே
உம் திரு கரங்களின் தழும்பெனக்கு
நித்திய ஆரோக்கியமே - என்
உம்மில் என் சந்தோஷத்தை நினைத்தே
நிந்தைகள் சகித்திடுவேன்
உந்தன் சிலுவையை நான் சுமக்க
உம் கிருபை ஈந்திடுமே - என்
சீயோனின் சிந்தையை நான் எப்போதும்
தரித்திட எனை நடத்தும்
மகிமையில் உம்மோடு நான் நிற்கவே
தேவா தயை செய்குவீர் - என்