Skip to main content

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார் எனக்கென்ன ஆனந்தம்


என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்
எனக்கென்ன பேரின்பம்

பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
நரர் வாழ்த்திடவே பெரும் நீதி
நீர் வாரும் மெய்ஜோதி - என்

உந்தன் மகிமையை என்றென்றும் சொல்வேன்
உந்தன் கிருபையின் மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
பரலோக வாழ்வின்றே - என்

ஆ! அல்லேலூயா துதி பாடு
அன்று அமலன் பிறந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு - என்