Skip to main content

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா உம் கிருபை தந்தாலே போதும்


என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும்
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும்

கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா
கடலினைக் கண்டித்த கர்த்ததர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் - என்

பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும்
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்
பரமனே என் முன் தீபமாய் வாரும் - என்

எதிர்காற்று விச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவா
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே - என்