Skip to main content

எந்நாளும் தேவனையே துதித்து போற்றிடுவேன் அவர் நாமம் எந்நேரமும்


எந்நாளும் தேவனையே துதித்து போற்றிடுவேன்
அவர் நாமம் எந்நேரமும்
ஊற்றுண்ட பரிமளமே

ஆபத்து நாட்களில் என் தேவன் அடைக்கலம்
அவர் சீயோனில் இருந்து என்னை இரட்சிக்க வல்லவர்
நான் பதறிபோகும் போது
அவர் நாமம் அடைக்கலமே (2) - எந்நாளும்

வேதனை நாட்களில் என் தேவனே என் துணை
சோதனை பெருகினால் என்னை தாங்கிடும் வல்லவர்
நான் தனிமையாகும் போது
அவர் நாமம் ஆதரவே (2) - எந்நாளும்

வியாதியின் நாட்களில் என் தேவனே வைத்தியர்
வசனத்தை அனுப்பியே நல் சுகத்தை அருளுவார்
நான் பெலன் இழந்த போது
அவர் நாமம் புது பெலனே - எந்நாளும்

வறுமையின் நாட்களில் என் தேவனே உறைவிடம்
தோல்வியின் வேளையில் என் தேவனே ஜெயகொடி
நான் சோர்ந்து போகும்போது
அவர் நாமம் ஆனந்தமே - எந்நாளும்