Skip to main content

எந்தன் இயேசு எனக்கு நல்லவர் அவர் என்றென்றும் போதுமானவர் - 2


எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் - 2
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
ஆவர் என்றுமே போதுமானவர் - 2

கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே - என்
வேதனை யாவையும் நீக்கி என்னில் ஶி புது
ஜீவனை ஊற்றினதால் - எந்தன்

அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிகச் சிறந்தவரே
துதிக்கப் படத்தக்கவரே - எந்தன்

புவி யாத்திரை மிகக் கடினம்
தேவக் கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினி ஸ்தம்பம்
அநுதினம் என்னை வழி நடத்தும் - எந்தன்

எந்தன் ஏக்கமெல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன் - எந்தன்