எந்தன் கண்மணியே உந்தன் கவலைகளை
உந்தன் கவலைகளை
எந்தன் கரத்தில் தந்து விடு
உன்னைக் கரம் பிடித்து கண் விழித்து
மார்போடு அணைத்திடுவேன்
அக்கினியில் நடக்கும் போது நீ
அக்கினி ஜ்வாலை உன்மேல் பற்றாமல் - 2
ஆறுகளை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நான் இருப்பேன் - 2 எந்தன்
உனக்கெதிராய் பாளையம் இரங்கி
உன்மேல் ஓர் யுத்தம் வந்திட நேர்ந்தும் - 2
எந்தன் பெலத்தால் மதிலை தாண்டி
சேனைக்குள் பாய்ந்து ஜெயம் பெருவாய் - 2
வெண்கல கதவும் இரும்பு தாழ்பாலும்
முறிந்து போகும் எந்தன் வார்த்தையாலே - 2
முடவர் நடக்க ஊமையர் பேச
எந்தன் ஆவியை உன்மேல் வைப்பேன் - 2
மரண இருளின் பள்ள தாக்கில்
மாந்தரின் அன்பர் பிரியும் போது - 2
மானிடர் கரத்தால் மகிழ்வுடன் அணைக்கும்
மன்னவன் இருக்க கலங்கிடாதே - 2