Skip to main content

எனக்கொருவர் இருக்கின்றார் - அவர் என்னையும் நேசிக்கிறார்


எனக்கொருவர் இருக்கின்றார் - அவர்
என்னையும் நேசிக்கிறார்
காட்டினிலே nலைந்த என்னை
கருணையாய் தேடுகின்றார்
அவர் தாம் இயேசு; அவர் தாம் இயேசு
அவர் தாம் இயேசு; அவரிடம் பேசு - 2

கானகத்து ஆட்டினைப் போல்
வழிதப்பித் திரிந்தேனே
மேய்ப்பன் அவர் தேடி வந்து
என்னையும் ஏற்றுக் கொண்டார் - அவர் தாம்

கடும் புயலும் பெருங்காற்றும்
மோதியே தாக்கினாலும்
அலைகடல் மேல் நடந்தவரின்
கரம் எனக்காதரவே - அவர் தாம்

என்னை அவர் தெரிந்ததினால்
மன்னரை அறிந்தேனே
பரத்தில் என்னை சேர்த்திடுவார்
பரிசுத்தம் அடைந்திடுவேன் - அவர் தாம்

மேகங்கள் மேல் அவர் வருகை
வேகமாய் நெருங்கிடுதே
அன்பருடன் சேர்ந்திடவே
ஆயத்தமாகிடுவோம் - அவர் தாம்