என் கன்மலையும் மீட்பருமான அன்பின் கர்த்தாவே என் துரகமும் என் கோட்டையும் என் ஜீவனும்
என் துரகமும் என் கோட்டையும் என் ஜீவனும்
இயேசுவே
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே - 4
கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள்
ருசித்து பாருங்கள் - 2
கர்த்தரில் மகிழ்ந்து களித்து நீங்கள்
கை கொட்டிப் பாடுங்கள் - 2 - என்
பரிசுத்த இருதய்த்தோடு நாமும்
பரமனை தொழுதிடுவோம் - 2
ஆவி ஆத்தும சரீரங்களையும்
அவருக்கு படைத்திடுவோம் - 2 - என்
கர்த்தரைத் துதித்து அவரது நாமத்தை
பிரஸ்தாபப் படுத்துங்கள் - 2
அவரது செயல்களை ஜனங்களுக்குள்
பிரசித்தப் படுத்துங்கள் - 2 - என்
பரிசுத்த ஆவியில் நிறைந்து நாமும்
பரமனை தொழுதிடுவோம் - 2
அந்நிய பாஷையில் பேசி மகிழ்ந்து
ஆண்டவரைத் தொழுவோம் - 2 - என்