Skip to main content

என் பெலனாகிய கர்த்தாவே உம்மை நான் நேசிக்கிறேன்


என் பெலனாகிய கர்த்தாவே
உம்மை நான் நேசிக்கிறேன்
எந்தன் நெருக்கத்திலே என் சத்தமதை
நீர் கேட்டு பதிலளித்தீர்

என் கன்மலையும் என் கோட்டையும்
என் இரட்சகரும் என் தேவனும் நீர்
நான் நம்பிடும் என் துரகமே
எந்தன் இரட்சண்ய கொம்பும் நீரே - என்

சிறுமைப்படும் மனிதனே கலங்கிடாதே
சீக்கிரம் நம் இயேசு வந்திடுவார்
மேட்டிமை மனிதர்க்கு நீ பயந்திடாதே
மேசியா என்றும் துணையானதால் - என்

இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தார்
நீதி என்னும் சால்வையை உடுத்துவித்தார்
கர்த்தர் பெலத்தால் மதிலை தாண்டிடுவேன்
அவர் வலக்கரம் என்னைத் தாங்கிடுமே - என்