Skip to main content

என்னை காண்கிற தேவன் நீர் அல்லோ கண்மணி போல் காப்பவர் அல்லோ


என்னை காண்கிற தேவன் நீர் அல்லோ
கண்மணி போல் காப்பவர் அல்லோ
தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே
தெரிந்தெடுத்தவரே . . . என்னை தெரிந்தெடுத்தவரே

என்னில் பெலனுமில்லை
என்னில் தகுதியில்லை
அழைத்தவர் நீர் உண்மையுள்ளவர்
அப்படியே செய்வீர் - என்னை

அழைத்து தெரிந்தெடுத்தீர்
அழைப்பை உறுதி செய்தீர்
அழைத்த அழைப்பும் கிருபை வரங்களும்
என்றும் மாறாததே - என்னை

உண்மையுள்ளவன் என்று
என்னை தெரிந்தெடுத்தீர்
அழைத்த அழைப்பில் உமக்கு முன்னே
உண்மையாய் நிலைத்திருப்பேன் - என்னை