என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்
உந்தன் தயவால் என்னை நடத்தும்
வல்ல ஜீவ வாக்குத் தத்தங்கள்
வரைந் தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்!
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே - என்னை
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
ஏழை என்னை நின் கையினின்று
எவரும் பறிக்க இயலாதே - என்னை
தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
உன்னை மறவேன் என்றதாலே ஸ்தோத்திரம்
உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
உன்னதா எந்தன் புகலிடமே - என்னை
திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணிநூரே - என்னை
உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பலே என்னைக் காத்திடுமே - என்னை
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே - என்னை
என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே - என்னை