Skip to main content

என் இயேசு ராஜன் வருவார் எண்ணிலங்கா தூதரோடு


என் இயேசு ராஜன் வருவார்
எண்ணிலங்கா தூதரோடு
என்னை மீட்ட இயேசு ராஜன்
என்னை ஆளவே வருவார்

அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு
அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி
அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு
அவர் வருகை மிகப்பெரும் அதிர்ச்சி - என்

உலகில் நடப்பவை எல்லாம்
அவர் வருகையின் உண்மையை கூறும்
அவர் வருகை மிகவும் சமீபம்
அவர் வரவை சந்திக்க ஆயத்தமா - என்

வானில் ஓர் பேரொளி தோன்றும்
விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும்
மேற்கும் கிழக்கும் நடுங்க
மேகங்கள் மீதே வருவார் - என்