Skip to main content

என் மீட்பரே என் இரட்சகா என் தேவனே என் கேடகம்


என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே

துதிகளின் பாத்திரனே திருச்சித்தம் போல் நடத்தி
துர்ச்சன ப்ரவாகத்தில் தேற்றினீர் - போற்றுவேனே
சதிமோச நாசங்களில் சத்துருவின் பயங்களிலும்
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே
சரணம் சரணம் மேசியாவே - என் மீட்பரே

தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான்
கன மகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே
உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாயந்திடுவேன்
வாழ்நாள் எல்லாம் நீர் என் தஞ்சம்
வழி நடத்தும் மேசியாவே - என் மீட்பரே