Skip to main content

என் ஏசுவே நீர் செய்திட்ட எண்ணற்ற நன்மைகளை


என் ஏசுவே நீர் செய்திட்ட
எண்ணற்ற நன்மைகளை
எண்ணியே எந்நாளும் நன்றியுடனே
துதித்துப் போற்றிடுவேன் - ஆயா

கடந்த வாழ் நாளெல்லாம்
கருத்தாய் ஆதரித்தீர்
கைவிடாதென்றும் தவறாமலென்னை
கனிவாய் நடத்தினீர் - என் ஏசுவே

துன்பப் பெருக்கினிலே
துணையாய் நின்றீரல்லோ
சிறுமை ஏற்ற நாட்களுக்கீடாய்
பெரும் மகிழ்ச்சி ஈந்தீர் - என் ஏசுவே

வாக்குத் தத்தங்களெல்லாம்
நாள்தோறும் நிறைவேற்றி
காத்ததால் உம்மை வாழ்த்திடுவேன்
நாதனே என்றென்றுமே - என் ஏசுவே

அழைத்த அழைப்பினில்
அசையா பர்வதம் போல
நிலையாய் நிற்க உயர் பெலனாய்
நித்யரே விளங்கினீர் - என் ஏசுவே

இந்த மா நன்மைகட்காய்
என்ன பதிற் செய்குவேன்
என்னையே உமக்கென்றுமே தந்தேன்
ஏற்றுக் கொள்வீர் இயேசுவே - என் ஏசுவே