Skip to main content

எந்தன் நல்லவர் இயேசு வல்ல மெய்தேவன்


எந்தன் நல்லவர் இயேசு
வல்ல மெய்தேவன்
என்னை தெரிந்துகொண்டார்
நான் எதற்கினி அஞ்சிடேன்
அவர் எந்தன் பரிகாரியே

காரிருள் சூழும் இத்தரையில்
காத்திடுவார் தினமும
என் கிருபை போதும் என்றுரைத்த
எந்தன் உள்ளம் கலங்கிடுமோ - எந்

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
நல்ல மேய்ப்பன் நான் என்றார்
கல்லான பாதைகள் கடந்தேன்
அவர்கரம் என்னை தாங்கினதால் - எந்

மகிமையைக் காணும் யாத்ரையிலே
மரணத்தின் தாழ்வினிலும்
ஆழ்கடல் ஆhங்களிலும்
அவர் பெலமுள்ள கரம் என்னை நடத்தும் - எந்