என் ஆத்துமா என் ஜீவ தேவன் மேல் என்றென்றும் தாகமாய் இருக்கிறதே
என்றென்றும் தாகமாய் இருக்கிறதே
நானும் போகையில் நேசர் இயேசுவை
மத்திய வானில் கண்டு மகிழ்ந்திடுவேன்
மானானது இளம் மானானது -2
நீரோடையை வாஞ்சித்து கதறுமாப் போல்
தேவனே என் ஆத்துமா உம்மை நோக்கி
வாஞ்சித்து கதறிடுதே
என் ஆத்துமா ஏன் கலங்குகிறாய்
ஏனோ எனக்குள் தியங்குகிறாய்
கர்த்தரை நோக்கி காத்திரு
அவர் இரட்சிப்புக்காக துதித்திடுவாய்
மதகின் இரைச்சல்கள் கேட்கையிலும்
ஆழத்தை ஆழம் அழைக்கையிலும்
அலைகளும் திரள்களும் புரள்கையிலும்
கிருபையால் என்னைக் தாங்கினதால்
அரணாகிய என்ன தேவன் நீரே
ஆனந்தமாய் உம்மை அண்டிடுவேன்
உந்தன் வெளிச்சத்தை அனுப்பிடுமே
உமது பர்வதம் வந்தடைவேன்