Skip to main content

என்னையே அர்ப்பணித்தேன் இயேசுவே உம் சேவைக்கே


என்னையே அர்ப்பணித்தேன்
இயேசுவே உம் சேவைக்கே
ஆவி ஆத்ம சரீரத்தில்
ஜெயம் தந்தாட்க் கொள்வீர்

லோக சிற்றின்பம் வேண்டேனே
தியாகத்தின் பாதையிலே
பூலோக நேசம் போதுமே
போதும் உம் அன்பென்றுமே - என்னை

பாரில் பாடுகள் வந்தாலும்
நோய் பிணி வருத்தினாலும்
வழுவாமல் தினம் சென்றிட
வல்லமை ஈந்திடுவீர் - என்னை

ஜீவ காலம் முழுவதும்
தேவனின் சேவை செய்வேன்
என் சித்தம் யாவும் நீக்கியே
உம் சித்தம் செய்திடுவீர் - என்னை

பூவில் உம் சுவிசேஷத்தை
பூரணமாய் உரைப்பேன்
கால் மிதிக்கும் இடம் தருவீரே
கர்த்தர் என்னோடிருப்பீர் - என்னை