Skip to main content

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்


என் இயேசுவே நான் என்றும்
உந்தன் சொந்தம்
என் ராஜனே அநுதினமும்
வழி நடத்தும்

உளையான சேற்றினின்றே
தூக்கியே நிறுத்தினீரே
உந்தனை நான் மறவேன்
உந்தனைப் போற்றிடுவேன் - என்

அலைந்தோடும் கடலதனை
அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செய்யும் - என்

தாயினும் அன்புவைத்தே
தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம்
உந்தனை பின் செல்லுவேன் - என்

அக்கினி சூளையிலே
நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திடமனதும்
என்றென்றும் தந்தருளும் - என்

ஆகாரின் அழுகுரலை
அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்துமே நான்
உந்தனைத் தேடுகிறேன் - என்