Skip to main content

என் தேவனே என் அன்பனே என் இருதயம் உம்மை துதிக்கும் கர்த்தாவே மகிமையாய் கீர்த்தனம் பண்ணி உம்மை பாடுவேன்


என் தேவனே என் அன்பனே என் இருதயம் உம்மை துதிக்கும்
கர்த்தாவே மகிமையாய் கீர்த்தனம் பண்ணி உம்மை பாடுவேன்
உமது ஆலயத்தின் நேராய் பணிந்து உம்மை ஸ்தோத்தரித்து
உண்மையினிமித்தம் கிருபையினிமித்தம் உந்தனின் நாமத்தை துதிப்பேன்
உம் வார்த்தையை என்றும் மகிமைப் படுத்தினீர்
உம் நாமத்தை என்றும் உயர்த்திக் கூறுவேன்

நான் கூப்பிட்ட அந்நாளிலே எனக்கு உத்தரவருளினீர்
ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்
ஊமது வார்த்தை கேட்கும்போது ராஜாக்கள் உம்மை துதிப்பார்கள்
கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதால் கர்த்தரின் வழியை பாடுவார்கள் - உம்

நீர் உயர்ந்தவராயினும் தாழ்மை யுள்ளவனை நோக்குகின்றீர்
மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகின்றீர்
துன்பத்தின் நடுவில் நடந்தாலும் தேவனே என்னை உயிர்ப்பிப்பீர்
சுத்துருவின் போபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர் - உம்

எனக்காக யாவற்றையும் இரட்சிப்பின் கர்த்தர் செய்து முடிப்பார்
கர்த்தாவே உம் கிருபை என்றென்று முள்ளதால் ஸ்தோத்தரிப்பேன்
வலது கரத்தால் இரட்சிப்பீர் நேசரே உம்மை போற்றுகிறேன்
உமது கரத்தின் கிரியைகளை நெகிழ விடாதிருப்பீராக - உம்