என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே
ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியனுக்கும் திடனான தேவன் நீரே
பெருவெள்ளத்தில் தப்பிக் கொள்ள அடைக்கலம் நீரே
வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள நிhலானோர் நீரே - என்
மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே
நம்பினோரின் நிந்தைகளை நீக்குபவரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே
உமக்காக என்னை உருவாக்கினீரே
உதிர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே
பெயரை சொல்லி பூரணமாய் அழைத்து கொண்டீரே
புதிய தொன்று என்னிலே செய்திட நீரே
கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே
காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே
நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே
நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே - என்