Skip to main content

எருசலேம் என் ஆலயம் ஆசித்த வீடதே


எருசலேம் என் ஆலயம்
ஆசித்த வீடதே
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டும்

பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்லத்தில்
எப்போது பணிவேன்?

எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்போட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்

நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே

எருசலேம் உன் ஆலயம்
நான் உன்னில் வாழுவேன்
என் ஆவல்; என் அடைக்கலம்
எப்போது சேருவேன்?