எழும்பிடுவாய் ஓ திருச்சபையே எழும்பிடுவாய் ஜெப வீரர்களை
எழும்பிடுவாய் ஜெப வீரர்களை
பூரண சுவிசேஷ வீரர்களாய்
புறப்படட்டும் எங்கும் அணியணியாய்!
இயேசுவுக்காய் பெரும் சேனை ஒன்றை
இந்திய நாட்டில் திரட்டிடுவோம் - நாம்
சிலுவைக் கொடி பிடித்தே அல்லேலூயா
சீயோனின் பாதைச் செல்வோம்
களைப்பினை மேற்கொள்ள கர்த்தரின் பாதத்தில்
காத்திருந்தே புது ஆசீர் பெறுவோம் - நாம்
கழுகினைப் போல் பறந்தே அல்லேலூயா
கர்த்தரின் சேவை செய்வோம்
இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே - நாம்
தியாகத்தின் பாதையிலே அல்லேலூயா
தினமும் நடத்திடுவோம்
ஆவியினால் எப்பொழுதும் நிறைந்தே
ஆவியின் வரங்களை உடையோராய் - நாம்
ஆயத்தமாக நிற்போம் அல்லேலூயா
ஆர்ப்பரித்தே மகிழ்வோம்
எதிரியின் சேனைக்குள் பாய்ந்தே செல்வோம்
எதிரியின் கோட்டைகள் தகர்த்தெறிவோம் - நாம்
எதிரியை வீழ்த்திடுவோம் - அல்லேலூயா
எழுதின பட்டயத்தால்
பாவத்தின் சிறைகளில் வாடிடும் மக்களை
பாவத்திலிருந்தே விடதலை செய்வோம் - நாம்
பரிசுத்தர் கூட்டமொன்றை - அல்லேலூயா
பரமனுக்காய் சேர்ப்போம்
எக்காள சத்தம் தொனித்திடும் வேளை
எதிர் கொண்டு இயேசுராஜனை சந்திப்போம் - நாம்
மேகத்தில் ஏறிச் செல்வோம் - அல்லேலூயா
மேதினியை ஆண்டிட