என்னை என்றும் நடத்திடுமே உம்மை என்றும் நோக்கிடுவேன்
உம்மை என்றும் நோக்கிடுவேன்
என் வாழ்நாட்களெல்லாம்
உமக்காக ஜீவிப்பேன்
என் ஜீவன் சுகம் பெலன் இயேசுவே
கண்களை உம்மேலே பதித்து விட்டேன்
தேவைகள் யாவையும் சந்திப்பவரே
கலங்கிடேனே நான் கலங்கிடேனே
யெகோவாயீரே என் தேவன் அல்லவா
சத்துரு யுத்தம் செய்ய எதிர்வந்தாலும்
கர்த்தரே எனக்கு ஆதரவானீர்
தப்புவித்தீரே விசாலத்தில் வைத்தீரே
யெகோவாநிசி என் தேவன் அல்லவா
நடந்திடமுடியா நேரங்களில்
தோளின்மேல் தூக்கியே சுமந்தீர் என்னை
நல்ல மேய்ப்பனாய் என்னை நடத்துகின்றீர்
யெகோவாரூவா என்தேவன் அல்லவா