என் தேவன் என் பெலனே அவர் கூறும் நல் வசனம்
அவர் கூறும் நல் வசனம்
என் பாதையின் வெளிச்சம்
அவர் நாமம் என் நினைவே
தீங்கு நாளில் என்னை அவர்
தம் கூடார மறைவில் காத்திடுவார்
தகுந்த வேளை தம் கரத்தால்
கன்மலை மேலாய் உயர்த்திடுவார் - என்
கர்த்தரிடம் ஒன்றைக் கேட்டேன்
அதையே அவரிடம்ம நாடிடுவேன்
அவரின் முகமதை நான் காண
அவரில் என்றும் நிலைத்திருப்பேன் - என்
கர்த்தருக்காய் காத்திருப்பாய்
அவரால் இதயம் ஸ்திரப்படுமே
திடமனதோடு காத்திருந்தே
அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே - என்