Skip to main content

எல்ஷடாய் எந்தன் துணை நீரே என் வாழ்வின் கேடகம் - (2)


எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம் - (2)
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே - (2)

காலை தோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம் - (2)
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம் - 3 - எல்ஷடாய்

இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபினேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம் - எல்ஷடாய்

யேகோவா ரஃப்பா எந்தநாளும்
எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றித் தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம் - எல்ஷடாய்

யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கெள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம் - எல்ஷ்டாய்