Skip to main content

கர்த்தருக்கு காத்திருந்து கழுகு போல் பெலனடைந்து


கர்த்தருக்கு காத்திருந்து
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
புது பெலன் அடைந்திடுவாய் நீ (8)

தாகமுள்ளவன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தின் மேல்
தண்ணீரை ஊற்றிடுவார் - புது பெலன்

சாத்தானின் கோட்டைகளை
சத்தியத்தால் தகர்ப்பாய்
சிலுவையை சுமந்திடுவாய்
ஜெயக்கொடி ஏற்றிடுவாய் - புது பெலன்

கர்த்தரில் பெலனடையும்
பாக்கியம் பெற்றிடுவாய்
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனுக்கு வருவாய் - புது பெலன்